மும்பை : சிவசேனா தலைவர் நட்டநடு சாலையில் சுட்டுக் கொலை

மும்பை

மும்பை கந்திவாலி பகுதியின் சிவசேனா கட்சித் தலைவர் சச்சின் சாவந்த் நட்ட நடுச் சாலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பை கந்திவாலி பகுதியின் சிவசேனா கட்சித் தலைவர் சச்சின் சாவந்த்.

நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் இவர் தனது நண்பருடன் கோகுல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு பைக்கில் முகமூடி அணிந்து இருவர் வந்துள்ளனர்

அதில் ஒருவர் தனது துப்பாக்கியால் சச்சின் சாவந்த் நெஞ்சில் 4 முறை சுட்டுள்ளார்.

அவர் மயங்கி விழவும் அந்த நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த. பாபா சாகிப் அம்பேத்கார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளார்.

அவரை சோதித்த மருத்துவர்கள் சச்சின் சாவந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் மும்பை நகர் சிவசேனா வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.