கையெழுத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடிக்கொண்ட பாஜ: சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை:

பாராளுமன்ற மக்களவையில் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, பாஜக முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனா புறக்கணித்து, மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு வழங்கியது.

இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில், பாஜக அனுப்பிய நோட்டீசில்  சிவசேனா கையெழுத்திட்டதை சாதகமாக்கி, பாஜ அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.

பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பாஜகவை எதிர்த்து வாக்களிக்கப் போவதாகவும், பின்னர் ஆதரித்து  வாக்களிக்கப்போவதாக கூறி குழப்பிய நிலையில், பின்னர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தது.

இந்த நிலையில்,   பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு  கடந்த இரண்டு நாட்களாக  பாஜக தலைவர் அமித் ஷா  பலமுறை போன் செய்தார் என்றும், அதை உத்தவ்  எடுக்காமல் புறக்கணித்தார் என்றும்  கூறி உள்ளது.

உத்தவ் தாக்கரே

இதுகுறித்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் எழுதியிருப்பதாவது,

பாஜகவில் போதுமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு அரசை வீழ்த்துவதற்காக அல்ல. அரசாங்கம் செய்து வரும் பாவங்களை பகிரங்கப்படுத்தவே என்றும் சாம்னாவில் குற்றம் சாட்டி உள்ளது.

மேலும், . உண்மையில், இந்த அரசாங்கம் பெரும்பான்மை  வென்ற முறைகேள்விக்குறியதே. மாபெரும் பண ஆற்றல், அதிகார போதை மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களை யையாளுதல் ஆகியவையே பாஜகவின்  வெற்றிக்கான மூன்று ரகசியம். நாட்டில் தற்போது உள்ளது போலி ஜனநாயகம் என்றும் விமர்சித்துள்ளது.

இந்த நிலையில், சிவசேனாவின் குழப்பமான  நிலைப்பாடு சர்ச்சைகளை உருவாகிகயது. இதுகுறித்து, சிவசேனா தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

தெலுங்குதேசம் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து, “பாஜக அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு நாள் முன்னதாகவே நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து சிவசேனா  தலைவர்  விளக்கினார். இதுகுறித்து எந்தவித கட்டளையும் பிறப்பிக்கவில்லை என்று மூத்த சிவசேனா தலைவர் ஒருவர் கூறி உள்ளார்.

இந்த நிலையில், பாஜகவின் கடிதத்தில் நாங்கள் கையெழுத்திட்டு கொடுத்தோம் என்று சிவசேனா நாடாளுமன்ற குழு தலைவர் கெய்ரே தெரிவித்துள்ளார்.  அந்த கடிதத்தை வெளியிட்டு பாஜக அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டது என்று குற்றம் சாட்டினார்.

கடிதத்தில் கையெழுத்திட்ட விவகாரம் குறித்து சிவசேனா கட்சி லோக்சபா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம்,   இந்த விவகாரம்   சந்திரகாந்த் கெய்ரே மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுமா என்று கேட்டபோது, பாஜகவின் நோட்டீசை படித்து பார்க்காமல் கையெழுத்திட்டது  கெய்ரேவின் தவறு அல்ல. இது வேறு ஒருவரின் தவறு என்று இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து கேள்வி எழவில்லை என்று தெரிவித்தார்.

2019 தேர்தலில் தனியாக போட்டியிடப்போவதாக சிவசேனா பலமுறை கூறியது. இந்த நிலையில், சிவசேனாவின் நேற்றைய  நிலைப்பாடு விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது.