சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி புரியும் 6 கூடுத நிதிபதிகளை நிரந்தர நீதிபகளாக நியமிக்கும் உத்தரவை குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்றார்கள். அவர்கள் வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் ஆவார்கள்.

உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த ஆறு கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் நேற்று பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து உத்தரவிட்டார்.

இந்த ஆறு பேரும் தற்போது நிரந்தர நீதிபதிகள் ஆகி உள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமானி வரும் 9 ஆம் தேதி அதாவது செவ்வாய்கிழமை அன்று பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.