Random image

நேபாளம்: ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 6 இந்தியர்கள் பலி

காத்மாண்டு:

நேபாள நாட்டின் பேடாடர் மலையில் கோஷி பகுதி வழியாக இந்திய வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவரில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் ஸ்வால்லோன் கோஷி ஆற்றில் கவிழ்ந்தது. தகவலறிந்த போலீசார் மீட்டு பணிகளை மேற்கொண்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும், மருத்துவமனையில் சேர்கப்பட்ட 3 பேரும் என மொத்தம் 7 வயது சிறுவன் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.