அசாமில் பயங்கரம்: உயர்அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் 6 பேர் சாவு

--

கவுகாத்தி:
சாம் மாநிலத்தில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் கட்டோவால் பகுதியில்   உயர்அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதன் காரணமாக குளத்து நீரில் மின்சாரம் பாய்ந்து மீன்கள் செத்து மிதந்தன.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அந்த பகுதியில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சிலர் குளத்திற்குள் இறங்கி மீன்களை எடுக்க முயற்சி செய்தனர்.

அப்போது அவர்களை மின்சாரம் தாக்கியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.  மேலும் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரபபை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மின்சாரம் துண்டித்த மின் வாரிய அதிகாரியின் வீட்டை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர்  சர்பனந்தா சோனோவால், நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும்,  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்