நைஜீரியா: தேவாலயம்  மீது துப்பாக்கி சூடு; 16 பேர் பலி

 

லாகோஸ்:

நைஜீரியாவில் சர்ச் மீது நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர்.

நைஜீரியாவில் முகமது புகாரி அதிபராக பொறுப்பு வகித்து  வருகிறார்.  இந்த நிலையில், அங்குள்ள பழங்குடியின  இஸ்லாயமியருக்கும்,  கிறிஸ்தவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

அந்நாட்டில் புலானி பழங்குடியின பிரிவை சேர்ந்த இஸ்லாமியர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  கிறிஸ்தவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.  நிலங்களில் ஆடுகளை மேய விடுவது பற்றிய விவகாரத்தில் இரு பிரிவினருக்கும் தொடர்ந்து மோதல் நிலவி  வருகிறது.

இந்நிலையில், குவெர் கிழக்கு நகரில் ஆயர் எம்பலம் பகுதியில் அமைந்த தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கிகளுடன் சென்ற  இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் இருவர் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆவர்.

இந்த ஆண்டு துவக்கத்தில்  மகுர்டி பகுதியில் நடந்த மோதலில் 73 பேர் கொல்லப்பட்டனர்.  புலானி பிரிவை சேர்ந்தவரான அதிபர் புகாரி, இத்  தாக்குதல்களை தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி விமர்சனங்கள் எழுந்தன.  ஆனால் இதற்கு அதிபர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.