‘உயர்ந்த மனிதன்’: பிக்-பி உடன் இணையும் எஸ்.ஜே.சூர்யாவின் புதிய படம்

யக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், பிக்-பி என்று அழைக்கப்படுபவ ருமான அமிதாப்பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்து, பின்னர் கதாநாயகனாகவும், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த  எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டினார்.

அவர் கதாநாயகனாக நடித்துள்ள  ‘இறவாக்காலம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ போன்ற படங்கள் திரைவானில் பறக்க தயாராக உள்ள நிலையில், புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே நடிகர் சிவாஜி கணேசன் நடித்துள்ள உயர்ந்த மனிதன் படத்தின் டைட்டிலேயே தற்போது தனது படத் திற்கு வைத்துள்ள  இந்த  படத்தை  ஸ்ரீதிருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் கே.சுரேஷ் கண்ணன், பைவ் எலிமெண்ட்ஸ் என்ற இரண்டு  நிறுவனங் களும் இணைந்து தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் அமிதாப்பச்சன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் படம் தயாரிக்கப்பட உள்ளது.

இந்த படத்தின் அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற் றது.   ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் தலைப்பை  ரஜினிகாந்த் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ள நிலையில், உயர்ந்த மனிதன் குறித்து பேசிய   நடிகர் சூர்யா, “எத்தனையோ தருணங்களில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சந்திப்பு எனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று கூறினார்.

மேலும்,  இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் சார் முதன்முறையாக இந்தத் தமிழ் படத்தில் நடிப்பதாக தெரிவித்தவர், நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன் என்று பெருமையாக கூறினார்.  இதற்காக நான் நன்றி சொல்ல வேண்டியது இயக்குநர் தமிழ்வாணன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன்  ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

படத்தின் ஸ்கிரிப்டை அமிதாப்பச்சன் சாரிடம் கொண்டு போய் கொடுத்தோம். அதைப்படித்த அவர் சில விளக்கங்கள் கேட்டார். அதை விவரித்ததும்,  இந்தப் படத்தில் கண்டிப்பாக நான் நடிக்கிறேன்.” என்று ஒப்புக் கொண்டதாக கூறினார். மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.