‘தல 60’ படத்தில் தான் நடிக்கவில்லை என எஸ்.ஜே.சூர்யா மறுப்பு…!

 

அஜித் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் 60-வது படத்தையும் போனி கபூர் தயாரிக்க, எச்.வினோத் இயக்குகிறார்.இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது . ஆனால் அதை மறுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா .

‘தல 60’ படத்தில் நான் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை . தயவுசெய்து பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா .

கார்ட்டூன் கேலரி