சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 17) ரிலீஸாகும் படம் ‘Mr. லோக்கல்’.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 8-ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘எஸ்.கே. 16’ என்று அழைக்கப்படுகிறது.

இதன் ஷூட்டிங், நாளை (மே 15) முதல் காரைக்குடியில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.