திறன் மேம்பாட்டு பயிற்சி – அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் தொடக்கம்

சென்னை: மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டுத் திட்டம், தமிழகத்தில் விரைவில் தொடங்கவுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்திற்கு 3 பகுதிகளை தேர்வுசெய்து, அங்கே தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கவுள்ளது.

இதன்மூலமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், அப்பகுதியின் தேவைக்கேற்ப பயிற்சியளிக்க திட்டமிடப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட பகுதியின் தொழில்துறை தேவைகளை ஈடுசெய்யும் வகையில் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்க இயலும் என்று கூறப்படுகிறது.

சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் மூலமாக, ஒவ்வொரு மாவட்டத்தின் வேலைத்திறன் குறித்தும் அறிந்துகொள்வதோடு, அதற்கேற்ப பயிற்சித் திட்டங்களை வகுத்து செயல்படுத்த முடியும். இதனால், இளைஞர்கள் எளிதாக வேலை வாய்ப்பை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed