எலும்பும் தோலுமான யானையைத் துன்புறுத்தும் இலங்கை ஆலய நிர்வாகிகள்

ண்டி, இலங்கை

லங்கை திருவிழாவில் பயன்படுத்தப்படும் யானையின் எலும்பும் தோலுமான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

 

ஆண்டுதோறும் இலங்கையில் 10 நாட்கள் நடைபெறும் பெரஹரா விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெற உள்ளது. விழாவின் போது கண்டியில் உள்ள புத்தரின் பாதுகாக்கப்பட்ட புனிதப் பல் அடங்கிய கலசம் அலங்கரிக்கப்பட்டு யானை மீது வைக்கப்பட்டு வாத்திய  முழக்கத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். இந்த ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட யானைகளும், 2000க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்பது வழக்கமாகும்.

பெரஹரா விழாவில் பங்கேற்கும் யானைகளுக்கு நடக்கும் கொடுமைகளை யானைகளைப் பாதுகாக்கும் தாய்லாந்து தொண்டு நிறுவன அறக்கட்டளை ஒன்று வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்கும் 70  வயதான டிக்கிரி என்ற பெண் யானை எலும்பும் தோலுமாக இருக்கும் அதிர வைக்கும் புகைப்படங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

 

அந்த யானையைத் தினமும் மாலை அணிவகுப்பில் வலுக்கட்டாயமாகப் பங்கேற்க வைத்துப் பல கிலோமீட்டர் தூரம் நடக்கவும், பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் வற்புறுத்தப் படுகிறது. இந்த யானைக்கு அணிவிக்கப்பட்டுள்ள உடையின் காரணமாக எலும்பும் தோலுமான உடலோ அல்லது பலவீனமான நிலையோ யாருக்கும் தெரியாமல் உள்ளது.

இலங்கை மக்களை இந்த தொண்டு நிறுவனம் யானைக்கு ஏற்பட, கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வுக்கு கடிதம் எழுத வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள  கோயில் செய்தித் தொடர்பாளர், “நாங்கள் எப்போதும் விலங்குகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளோம். யானை டிக்கிரியை மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர்” என அறிவித்துள்ளார்.

சமூக வலை தளங்களில் தாய்லாந்து தொண்டு நிறுவனம் வெளியிட்ட   புகைப்படங்களைத் தொடர்ந்து பலரும் யானைகளுக்கு இது போல நடக்கும் கொடுமைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.