2,300 அடி உயரத்தில் கண்ணைக் கட்டிக்கொண்டு கயிற்றில் நடந்து சாகசம் புரிந்த இளைஞர்!

பிரான்ஸ் நாட்டில் இரண்டு சிகரங்களுக்கு இடையே 2,300 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் கண்ணைக் கட்டிக் கொண்டு நடந்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

blindfolds

பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இரண்டு சிகரங்களுக்கு இடையே, கிட்டத்தட்ட 2,300 அடி உயரத்தில் இரண்டு சிகரங்களுக்கு இடையே நடந்து சென்று அன்டாய்னே கிரேஷினன் (Antoine Cretinon) என்ற இளைஞர் சாதனையை படைத்துள்ளார். அன்னெசி ஏரியின் கரையில் அமைந்துள்ள மலைகளுக்கு இடையே கயிற்றின் மீது நடந்த அவர் இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.

பதைபதைக்க வைக்கும் இந்த சாகசத்தின்போது கிரேஷினன் தனது கண்களை கட்டிக்கொண்டார். இவரது சாகச நிகழ்ச்சி அந்நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து ஏராளமான பார்வையாளர்களைக் கவர்ந்தது.

அசால்ட்டாக சாகசம் புரிந்த அன்டாய்னே, “கண்களைக் கட்டிக்கொண்டுவிட்டதால் உடலின் மற்ற பாகங்கள் மீது வழக்கத்தைவிட பத்து மடங்கு கவனம் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.