உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வக்கீல் சுதிர்குமார் ஓஜா என்பவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் பெருகியதற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததுதான் காரணம் என்று பேசியுளளார். இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துகளை அவர் தெரிவித்து இருக்கிறார்.

அதனால் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு செப்டம்பர் 4ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட் ஹரி பிரசாத் தெரிவித்தார்.