Random image

டிவிட்டரில் மோடி குறித்து அவதூறு: பாஜ மூத்த நிர்வாகி தருண் விஜய் விளக்கம்

டில்லி:

பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறு பதிவிடப்பட்டது. இதையடுத்து, அவரது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தருண்விஜய் டிவிட்டர் கணக்கை யாரோ மர்ம நபர்கள் ஹேக் செய்து, மோடி குறித்த அவதூறுகள் பதியப்பட்டதாக தெரிய வந்ததுள்ளது. நேற்று இரவு 10 மணி முதல்  தருண்விஜய் டிவிட்டர் கணக்கில் இருந்து பாஜக குறித்த அவதூறு விமர்சனங்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வந்தன. அதில், நரேந்திர மோடி ஒன்று தானாக பிரபலமாக இல்லை. எனவே நரேந்திர மோடி தனது காட்டுமிராண்டித் தனத்தை கைவிட வேண்டும்.

ராகுலின் கைலாஷ் யாத்திரையை பழிப்பது மிகவும் தவறானது. இதை எந்தவொரு ஹிந்துவும் செய்ய மாட்டான். அவரது பயணமானது ராகுலுக்கும், சிவனுக்கும் இடையிலானது. சிவனை விட எதுவும் பெரிது கிடையாது என்பது போன்ற அடுக்கடுக்கான டிவீட்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து முடக்கப்பட்ட தருண்விஜய் டிவிட்டர் கணக்கு  சரிசெய்யப்பட்டு பதிவுகள் நீக்கப்பட்டன. .

இந்த சர்ச்சை குறித்து விளக்கம் தெரிவித்து  பதிவிட்டுள்ள தருண்விஜய், என்னுடைய டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு,  பாஜக குறித்த அவதூறுகளை எனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டனர்.  இவை அனைத்தும் வருகிற 2019 தேர்தலை மனதில் வைத்து வேண்டுமென்றே நடத்தப்பட்டது.

. பாஜக விரோத தீய சக்திகளிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள். இது ஒரு திட்டமிட்ட சதி. நானும், எனது குடும்பமும் வாழ்நாள் முழுவதும் பாஜக-வுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். எதையும் எதிர்பார்த்து நாங்கள் இதைச் செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்காக எங்கள் உயிரையும் அளிக்கத் தயார். இவ்விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.