மதுரை அருகே கமலஹாசன் மீது செருப்பு வீச்சு

மதுரை:

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் மீது செருப்பு வீச்சு நடந்தது.


கமலஹாசனின் இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் கமலஹாசன் மீது வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், 2 நாட்கள் அமைதியாக இருந்த கமலஹாசன், இன்று மீண்டும் திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அதற்காக அவர் மதுரையிலிருந்து சென்றபோது, அவர் மீது மர்மநபர் ஒருவர் செருப்பை வீசினார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.