‘ஸ்லிப்பர் செல்’: விரைவில் ஆபரேசன்! எடப்பாடிக்கு டிடிவி மீண்டும் எச்சரிக்கை!

பெங்களூரு:

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை டி.டி.வி.தினகரன் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கட்சியின் நலனுக்காக விரைவில் சில அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படும் என்றார்.

ஏற்ககனவே தினகரன் கூறும்போது,  யாருக்கு எப்போது எந்த ஆபரேசன் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். ஆபரேசன் செய்யும் போது அதை செய்வேன் என்று கூறியிருந்த நிலையில் தற்போத மீண்டும் ஆபரேசன் நிச்சயம் நடக்கும் என்று கூறி உள்ளார்.

மேலும், எடப்பாடி அணியில் ‘ஸ்லீப்பர் செல்’ போல உள்ள எனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள்   நேரம் வரும் போது வெளி வருவார்கள். சசிகலா ஆலோசனைப்படி  அப்ஆபோது பரேசன் நிச்சயம் நடக்கும் என தினகரன் எடப்பாடி அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிகள் இணைவது ஒன்று. ஆனால், சிலர் தங்களது பதவியை காப்பாற்ற சுயநலத்தால் இணைப்பு நடந்தாலும், அது நீடிக்குமா என்பது சந்தேகம்.

சசியிடம் ஆலோசனை பெற்று செல்கிறேன். நிச்சயம் ஆபரேசன் இருக்கும். அதனை நீங்கள் பார்க்கலாம்.  இ.பி.எஸ்., அணியில் சிலர் ஸ்லீப்பர் செல்களாக உள்ளனர். தேவைப்படும் போது அவர்கள் வெளிவருவார்கள்.

முதல்வர் அறிவிப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி