பெங்களூரு:

மிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்த டிடிவி தினகரன் இன்று பெங்களூரு சிறைச்சாலையில் உள்ள தனது சித்தி சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் முடிவு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை யில்லா தீர்மானத்தின்போது,  தனது ஆதரவு சிலீப்பர்கள் வெளியே வருவார்கள் என்று கூறினார்.

ஏற்கனவே இதுபோல பல முறை தெரிவித்துள்ள டிடிவி தினகரன், இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் சிலீப்பர் செல் வெளியே வருவார்கள் என்று பாவ்லா காட்டி வருகிறது.

அதுபோல, லோக்சபா தேர்தலில்  பாரதிய ஜனதாக கட்சி அமோக வெற்றி பெற்றது தொடர்பான கேள்விக்க, அது மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல; வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்து உள்ளார்.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில்,  தினகரனின் அமமுக வேட்பாளர்கள் பெரும்பாலும் ஒற்றை இலக்க சதவீதத்திலேயே வாக்கு வங்கியைக் கைப்பற்றியுள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய தொகுதிகளில் மட்டும் அமமுக முறையே 13.3, 11.3, 12.28, 10.01 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தத்தில் மக்களவைத் தேர்தலில் அமமுக 5.16% வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதிமுகவுக்கு சவாலாக அமமுக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக கட்சி அடியோடு மக்களாலும், அதிமுகவினராலும் புறக்கப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணத்தை அள்ளி வீசியதால் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் மற்ற தேர்தலிலும் அதுபோல வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவில் மிதந்து வந்த நிலையில், அவரது கனவு சுக்குநூறாக நொறுங்கிபோனது. இதற்கு முக்கிய சாட்சி, சென்னையில் போட்டியிட்ட டிடிவியின் வலதுகரமான வெற்றிவேலின் மிகக்குறைந்த  வாக்குகளே… இந்த நிலையில் மீண்டும் சிலீப்பர் செல்கள் என கூறி வருவது அனைவரையும் ஏமாற்றும் வேலை என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.