“சேரி பிஹேவியர்”: பிக்பாஸ் காயத்ரிக்கு நெட்டிசன்களின் கண்டனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில், காயத்ரி ரகுராம், “சேரி பிஹேவியர்” என்று ஓவியாவை சொல்ல… அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அவற்றில் சில..

Vini sharpana

பிக்பாஸில் ‘சேரி பிஹேவியர்’ எனக்கூறி சா’தீ’ திரியை கொளுத்திப்போட்ட காயத்திரி ரகுராமே…சேரி பிஹேவியர் என்றால் என்ன தெரியுமா?

மெரினா போராட்டத்தின்போது காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி இரத்தம் சிந்திய இளைஞர்களை பாதுகாத்து தங்களது வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு நிற்கதியாய் நிற்கிறார்களே அதுதான் சேரி பிஹேவியர். காயத்திரியைவிட உணரவேண்டியது விஜய் டிவிதான்.

டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏற்றிக்கொள்ள என்ன கருமத்தை வேணும்னாலும் பண்ணிக்கிட்டிருந்தீங்க… பொறுத்துக்கிட்டோம். ஆனால், வன்கொடுமை வழக்கு தொடுக்கும் வார்த்தைகளை எடிட் செய்யவேண்டிய ஒரு தொலைக்காட்சி இப்படி காயத்திரி ரகுராம்களை பேசவைப்பது நாகரீகமான செயலா?

இப்படியே நிகழ்ச்சி நடத்தினால் பிக் பாஸ் ‘பிக் ஃபெயில்’ ஆகிவிடும். விஜய் டிவி வியாபார டிவியாக இருந்துவிட்டுபோகட்டும். விபரீத டிவியாக மாறவேண்டாம்!!

Saranya Satchidanandam

சில ஆண்டுகள் முன்பு பிக் பிரதர் ‘ னு ஒரு நிகழ்ச்சியில் நம்மூர் ஷில்பா ஷெட்டியை ஒரு பெண் நிற வெறி கமன்ட் அடிச்சு பிரச்சனையானதும், அதுக்கப்பறம் அந்த நிகழ்ச்சியை 4 கோடி பேர் உலகளவில் பார்க்கத் தொடங்கியதும் சமூகம் அறியும். . # சேரி_Behavior னு வார்த்தைய மாத்திப் போட்டுட்டா கண்டுபிடிக்க முடியாதா விஜய் டிவி ஜி???

Sundar Rajan தொலைகாட்சி விவாதங்களில் பாஜக & அதிமுக பிரதிநிதிகள் பேசுவதற்கும், பிக் பாஸில் காயத்ரி & ஆர்த்தி பேசுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை

Rajan Kurai Krishnan

”சேரி பிஹேவியர்” என்ற கூற்றினை ஒளிபரப்பியதற்கு விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும். பெரியார் திடல் சென்று பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைவரும் பரவலாக கண்டித்தால்தான் இது நடக்கும். இல்லாவிட்டால் இது போன்ற கூற்றுக்களை தொடர்ந்து இயல்பாக்குவது பழக்கமாகிவிடும். காயத்ரி ரகுராம் என்ன வேண்டுமானால் கூறலாம்.

ஆனால் அதை ஒளிபரப்புவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது விஜய் டிவிதான். . பூ.கொ. சரவணன் சேரி என்றால் சேர்ந்து வாழும் இடம் என்று பொருள். ஆனால், சேர்ந்து வாழ்வதற்காகக் குறிப்பிடப்பட்ட இடத்தையே பிரித்துப் பார்ப்பதற்கான இடமாக மாற்றியது நம் தமிழ்ச் சமூக அவலம். காலப்போக்கில் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வாழும் இடமாக ‘சேரி’ என்ற சொல் மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுமங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழும் இடத்தைக் குறிக்க பார்ப்பனச் சேரி, இடையச்சேரி போன்ற வார்த்தைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வணிகர்களான யவனர்கள் வாழ்ந்த இடம் யவனச்சேரி என்றழைக்கப்பட்டது என்பதை அறியும்போது, ‘சேரி’ என்பது சேர்ந்து வாழுமிடத்தைத்தான் குறிக்கிறது என்பதை உணரலாம். ஆனால், தமிழ்ச் சமூகத்தில் தீண்டாமையும் சாதியமும் ஆழமாக வேரூன்றிய பிறகு ஊர், சேரி என்ற இரண்டு வகைப் பிரிவினைகளும் சேரியில் வாழ்பவர்கள் இழிவானர்கள் என்ற பிம்பமும் கட்டமைக்கப்பட்டன.

நமது தமிழ் சினிமாக்களும் சேரிகளில் வாழ்பவர்களைக் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களாகவே தொடர்ச்சியாகச் சித்தரித்துவந்திருக்கின்றன. இத்தகைய மனப்போக்கின் விளைவை இப்போது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் பார்க்கிறோம். ஏனென்றால் காயத்ரி ரகுராம் தனது உண்மையான சுயரூபத்தை காட்டுகிறார்.

தலீத் வீடுகளில் சாப்பிடுகிறோம் என போலியாக தமிழிசை வேணுமென்றால் பீற்றிக்கொள்ளலாம் ஆனால் அக்கரஹாரம் என்றுமே தனது BEHAVIOUR ஐ மாற்றிக்கொள்ளாது.

Sakthi Vellaiyan

சேரி BEHAVIOUR என்று காயத்ரி ரகுராம் பேசியிருந்தால் அதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் காயத்ரி ரகுராம் தனது உண்மையான சுயரூபத்தை காட்டுகிறார். தலீத் வீடுகளில் சாப்பிடுகிறோம் என போலியாக தமிழிசை வேணுமென்றால் பீற்றிக்கொள்ளலாம் ஆனால் அக்கரஹாரம் என்றுமே தனது BEHAVIOUR ஐ மாற்றிக்கொள்ளாது.