Random image

பிபிஎப் உள்பட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு

டில்லி:

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), செல்வமகள் சேமிப்பு உள்பட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கன வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருவது வழக்கம். அதன்படி, தற்போது வரும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டுகான வட்டி விகிதம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வங்கிகள், தபால் அலுவலகங்களில் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து மத்திய நிதி அமைச்சகம் சுற்றிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில், 1 முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 0.30 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

5 ஆண்டு டெபாசிட்டுகளுக்கு 0.40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்), செல்வமகள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் (என்எஸ்சி), அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் 0.40 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.

பி.பி.எஃப் சிறு சேமிப்பு திட்டம் உள்ளிட்டவைகளின் வட்டி விகிதத்தை 0.4% அதிகரித்து உத்தரவு.

பி.பி.எஃப்., தேசிய சேமிப்பு பத்திர முதலீடுக்கான வட்டி விகிதம் 7.6%இல் இருந்து 8%ஆக உயர்வு

வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பிறகு, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு 8 சதவீத வட்டி கிடைக்கும்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.5 சதவீத வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கு 8.7 சதவீத வட்டி கிடைக்கும்.

இந்த வட்டி உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.