தொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் கடன் : புதிய திட்டம் தொடக்கம்

டில்லி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நாடெங்கும் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல கடன் உதவி திட்டங்களை அறிவித்து வருகிறது. அவ்வகையில் இத்தகைய தொழில் நிறுவனங்கள் வங்கியில் இருந்து 59 நிமிடங்களில் க்டன் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அந்நிகழ்வில் பிரதமர் மோடி, “தொழில் துறை வளர்ச்சிக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்க எளிதில் கடன் பெற ஒரு போர்டல் தொடங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 59 நிமிடங்களுக்குள் ரூ. 1 கோடி வரை கடன் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போர்டல் மூலம் ஜி எஸ் டியில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் கடன் பெற முடியும்.

இத்தகைய தொழில் நிறுவனங்களுக்க் ரூ.6000 கோடி தீபாவளிப் பரிசாக ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 4 வருடங்களுக்கு முன்பு இந்தியா 143 ஆம் இடத்தில் இருந்தது. தற்போது முன்னேறி நமது நாடு 77 இடத்துக்கு வந்துள்ளது. விரைவில் நாம் முதல் 50 இடங்களுகுள் வந்து விடுவோம்” என தெர்வித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.