சென்னை:

மிழகத்தில் விரைவில் பள்ளிகளில்  கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு கொண்டுவரப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். முதல் கட்டமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஸ்மார்ட் போர்டு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. அங்குள்ள  அரண்மணை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, சரஸ்வதி மகால் நூலகத்தின் வளாச்சிக்காக தமிழக அரசு தற்போது வழங்கி வரும் 72 லட்சம் ரூபாயை உயர்த்தி ஒரு கோடி ரூபாயாக வழங்கப்படும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் முழுவதும் அடுத்த மாதத்திற்குள் கணிணி மயமாக்கப்படும் என்றும், விரைவில் பள்ளிகளில் கரும்பலகை களுக்கு பதில் ஸ்மார்ட் போர்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரை கொண்டுவரப்பட உள்ளதாகவும், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தெரிவித்தார்.