ஸ்மார்ட் போனை  கிரெடிட்- டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றலாம். ஆனால் அதற்கான செலவை நினைத்தால்… கார்டாவது… கீர்டாவது என்று நினைக்க தோன்றுகிறது….
கடந்த மாதம் 8ந்தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பணப்புழக்கம் குறைந்துள்ளது.
நாட்டு மக்களை டிஜிட்டல் பண பரிவத்தனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. மேலும் பணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பல விளம்பரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக சிறிய வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பே-டிஎம் ஆப் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி கட்டணங்களை பெறுவது, செலுத்துவது அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக பிஓஎஸ் இயந்திரங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன்கள்தான் உபயோகித்து வருகின்றனர். இந்த போனையே  கார்டு ரீடர்களாக மாற்ற முடியும். வெளிநாடுகளில் இதுபோன்ற கார்டு ரீடர்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் இதுவரை இல்லை…இனிமேல்தான் உபயோகத்துக்கு வரும்….

சரி, ஸ்மார்ட்போனை எப்படி கிரெடிட்- டெபிட் கார்டு ரீடர்களாக மாற்றலாம் என்பதை பார்க்கலாம்….
இதற்காக முதலில் நீங்கள் வாங்க வேண்டியது ஸ்மார்ட் போன் கார்டு ரீடர் என்ற ஒரு சிறிய இயந்திரம். உங்கள் மொபைலுக்கு சப்போர்ட் செய்யக்கூடியதா என்பதை விசாரித்து வாங்குவது நலம்.
பின்னர் அதற்குரிய ஆப்-ஐ கூகுல்ப்ளே-யில் இருந்து பதவிறக்கம் செய்து, மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
அதையடுத்து, நீங்கள் வாங்கிய கார்டு ரீடரை, ஸ்மார்ட் போனில் இணைத்து, அதற்கான ஆப்-ஐ இயக்கினால், உங்கள் கார்டு ரீடர் உபயோகமாகிறதா என்பது தெரிய வரும்.
தொடர்ந்து உங்களிடம் உள்ள டெபிட் அல்லது கிரிடிட் கார்டை, ரீடரில் சொருகி ஸ்வைப் செய்து, பின்-எண்ணையும் கொடுத்தால், ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆப் மூலமாக உங்களது கார்டில் எவ்வளவு பணம் உள்ளது என்ற விவரம் உடனடியாக தெரியவரும்.
இதன் வாயிலாக பண பரிவர்த்தனையும் செய்ய முடியும். மோடி சொல்லும் பணமில்லா பண பரிவர்த்தனை செய்யலாம்.
ஆனால், இதில் ஒரு பிரச்சினை உள்ளது. இந்த கார்டு ரீடர் உபயோகப்படுத்த வேண்டுமானால், நீங்கள் மாதாமாதம் அதற்கான சிறு தொகை,  குறைந்தது 200 ரூபாய் முதல் அதிக பட்சமாக 1000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
அதேபோல் இந்த கார்டு ரீடரை உபயோகப்படுத்த வேண்டுமானால், அதற்காக முதலில் இனிசியல் பேமண்டும் கட்ட வேண்டும்.
இது சாமானியர்களுக்கு சாத்தியமா?…
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பணமில்லா பரிவர்த்தனை….  மக்களை பிச்சைக்காரனாக மாற்றி உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை….
அட… போங்கப்பா  நீங்களும் உங்க  மெஷினும்….