சென்னை:

மிழகத்தில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பெண்களுக்காக பிரத்யேகமாக ‘ஷீ டாய்லட்’ அமைக்கப்பட உள்ளதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார்.

நாட்டின் பல மாநிலங்கள் மற்றும்  கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டே பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,  பிரத்யேகமாக ஷீ டாய்லட் மற்றும் ரெஸ்ட் ரூம் கட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இனிமேல்தான் கட்டப்போவதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,  சென்னையில் பெண்களுக்காக பிரத்யேக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஷீ டாய்லெட் ((SHE Toilets )) என்ற சிறப்பு கழிப்பறைகள் அமைக்கப்படும் என்றும்,  நிர்பயா நிதியின் கீழ் இது அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்த டாய்லட்டில்,  ஹூட்டர் அலாரம் மற்றும் சென்சார் உள்ளிட்ட பிரத்யேக பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும் என்றும்,  விரைவில், ஷீ டாய்லெட் என்ற சிறப்பு கழிப்பறைகள் சென்னை மாநகராட்சியால் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.