charge
இந்தியாவில் ஸ்மார்ட் போன்  உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை  கூடிக்கொண்டே செல்கிறது. இந்த ஸ்மார்ட் போன் மூலம், 2G, 3G, 4G என தற்கால நெட்வொர்க் மற்றும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமுக வலைதளங்களுக்கு செல்ல எளிதாகிறது.
இதன் காரணமாக ஸ்மார்ட்போன் உபயோகம்  அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை. என்னவென்றால், பெரும்பாலானவர்கள்.  எனது போன் உடனே டிரை ஆகி விடுகிறது, சார்ஜ் நிற்பதில்லை என்று குறை சொல்வதை பார்த்திருக்கிறோம், ஏன் நாமே உபயோகப்படுத்தி பார்த்திருக்கிறோம். தொடர்ந்து சில மணி நேரங்களில்  உபயோகத்தின்போதே ‘பேட்டரி லோ’ என சத்தம் கொடுக்க ஆரம்பிக்கும், உடனே நாம் சார்ஜரை நோக்கி செல்வோம்… இதுதான் வாடிக்கையாக நடப்பது.
இந்த பேட்டரி லோ  பிரச்சனை ஏன் ஏற்படுகிறது, அடிக்கடி சார்ஜ் போடுவதால் ஏற்படுகிறதா அல்லது, இரவு முழுவதும் சார்ஜ போடுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறதா? இதன் காரணமாக பேட்டரியின் ஆயுட்காலம் குறைந்துவிடும் என பரவலான கருத்து நிலவுகிறது. அது உண்மை தானா?
பொதுவாக ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பவர்கள், அதை இரண்டு வருடங்களுக்கு மேலே பயன்படுத்துவதில்லை. அதற்குள் புதிய ரக போன்களை வாங்க இதை விற்றுவிடுகின்றனர். அதனால் அவர்களுக்கு பேட்டரியின் சேதம் குறித்து தெரிவதில்லை.
charges
ஆனால் அடிக்கடி சார்ஜ் போடுவதால், போனில் உள்ள லித்தியம் பேட்டரிகள் சேதமடைகிறது, இதனால் சார்ஜ் நிற்பதில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து  ஆங்கார்  பேட்டரி தியாரிப்பு  நிறுவன அதிகாரி கூறியது:  ” ஸ்மார்ட் போன்களை அதிக நேரம் சார்ஜ் செய்தாலும் அதிக குறிப்பிட்ட அளவுக்கு மேல் அது சார்ஜ் ஆகாது , அதனால் பேட்டரி சேதமும் அடையாது”என கூறினார்.
இது போல் அடிக்கடி சார்ஜ் செய்தால்  லித்தியம் அயன்  பேட்டரிகள் சேதமடைவது உறுதி. ஆனால் அது அதிக நேரம் சார்ஜ் போடுவதால் அல்ல, ஏனெனில் ஸ்மார்ட் போன்கள் அதிக சார்ஜ்ஜை புறந்தள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சேதமடைய காரணம் – அதிக சூடு
பேட்டரிகள் சேதமடைய முக்கிய காரணம் நம் பேட்டரிகள் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதனால் பேட்டரிகள் சூடாகும் ஆகையால் அது சேதமடைகிறது. ஸ்மார்ட் போன்கள் எப்போதும் 35 டிகிரி வெப்பத்தை விட குறைவாக வைத்திருக்கவேண்டும்.
இதற்கு தீர்வு?
நமது ஸ்மார்ட் போன் பேட்டரிகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஒரு வழி உள்ளது. அது என்னவெனில் பொறுமையாக சார்ஜ் ஏற்றும் வகையிலுள்ள சில சார்ஜர்களை பயன்படுத்தினால், பேட்டரிக்கு சேதம் ஏற்படாது அதன் ஆயுட்காலமும் அதிகரிக்கும் .