99 ரூபாய்க்கு இந்தியாவில் ஸ்மார்ட்போன்

Daily_News_4741741418839

டெல்லி : ரூ.99 விலையிலான ஸ்மார்ட்போனை்  இந்தியாவில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நமோடெல் அச்சே தின் என்ற இந்த ஸ்மார்ட்போன் 4 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் ஒரு ஜிபி ராம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என்று நமோடெல் நிறுவனத்தின் நிறுவனர் மாதவ ரெட்டி தெரிவித்தார்.

. ரூ. 2,999 அடக்க விலைக்கொண்ட இந்த போன்  மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட்போனுக்கு namotel.com என்ற  இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் இந்திய குடி மக்களுக்கும், ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும் என ரெட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம்  25-ம் தேதி வரை முன்பதிவு  செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி