டில்லி

த்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் வைப்பு நிதி சான்றிதழ் ஏலம் விடப்பட்டு அந்த தொகை பெண் கலைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக ஸ்மிரிதி இரானி பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 1990 களிளில் மிகவும் ஏழ்மையில் இருந்தார். அப்போது அவருடைய ஸ்மிரிதி மல்கோத்ரா ஆகும். அவர் மும்பை பாந்திராவில் மெக்டொனால்ட் உணவகத்தில் மேஜைகள் மற்றும் தரையை சுத்தம் செய்யும் பணியை செய்து வந்தார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.1800 கிடைத்து வந்தது.

அதன் பிறகு அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். அப்போது இந்தி சீரியலான ”கியூன் கி சாஸ் பி கபி பகு தீ” என்னும் குடும்பத் தொடரில் நடித்தார். இதற்கு தமிழில் மாமியாரும் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவர் என பொருளாகும். இந்த தொடர் அவருக்கு மிகவும் புகழை அளித்து அவர் புகழ்பெற்ற நடிகை ஆனார்.  ஸ்மிரிதி மெக்டொனால்ட் உணவகத்தில் அவரிடமிருந்து பிடிக்கப்பட்ட வைப்பு நிதியை திரும்ப பெறவில்லை.

சுமார் 30 வருடங்களாகும் நிலையில் அவரது வைப்பு நிதி சான்றிதழ் மும்பையை சேர்ந்த பருத்தி துணி ஏற்றுமதி முன்னேற்ற வாரியத்திடம் கிடைத்துள்ளது. வாரியம் அந்த சான்றிதழை  ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் மூலம் பெண் கலைஞர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.