மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு அபாயம் அவர்களின் புகைக்கும் பழக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இருப்பினும் அந்த அபாயத்தின் தீவிரத் தன்மைக் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் அறியப்படவில்லை என கூறியுள்ளது.

இதைப்பற்றி உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், நோயாளிகளின் புகைப்பழக்கம்,  கடுமையான நோய் பாதிப்புக் கொண்ட மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் இறப்புக்கு உள்ளாகும் அபாயத்துடன் தொடர்புடையதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவுகளில் உலக சுகாதார நிறுவனம் புகைபிடித்தல் மற்றும் கோவிட் -19 ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து வெளியிடப்பட்ட 34 ஆய்வுகளை மதிப்பாய்வு செய்தது. இதில் தொற்றுநோய்க்கான நிகழ்தகவு, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், நோயின் தீவிரம் மற்றும் இறப்பு ஆகியவை அடங்கும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளில் 18%  பேர் புகைபிடிப்பவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், நோயாளிகள் புகைபிடித்தார்களா இல்லையா என்பதற்கும் அவர்களின் நோயின் தீவிரத்திற்கும், மருத்துவமனை உதவி தேவைப்படுவதற்கும், நோயாளிகள் இறக்கும் ஆபத்துக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதாக WHO குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில், பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் ட்ட ஒரு ஆய்வு முடிவில், புகைபிடிப்பவர்கள் கோவிட் -19 தொற்றைப் பெறுவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாக ஆபத்து குறைவாக இருப்பதாகக் கூறிஇருந்தனர். அவர்கள் நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது நிகோடின் பட்டைகளைக் கொண்டு நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடம் பெரும் அளவிலான சோதனைகளுக்கு திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்களின் முந்தைய ஆய்வு பலத்த கேள்விக்குள்ளானதால், அது கைவிடப்பட்டது.

மேலும், WHO கூறும்போது, “மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் புகைக்கும் பழக்கம், நோய் மற்றும் இறப்பின் தீவிரத்தோடு தொடர்புடையது என்று கிடைக்கக்கூடிய சான்றுகள் தெரிவிக்கின்றன. னவே, புகைப்பிடிப்பவர்கள் அப்பளக்கத்தில் விரைவாக வெளியேற வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. நிறுத்திக்கோங்க!!!
தமிழில்: லயா