சர்க்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சி: நடிகர் விஜய் மீது வழக்கறிஞர் புகார்

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு பெயர் சர்க்கார் என்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த  சர்கார் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிராக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் புகார்

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், நடிகர் விஜய் பிறந்தநாளான  கடந்த 21ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி உள்ளது. இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

ஏற்கனவே பாமக இதுகுறித்து விமர்சித்துள்ள நிலையில், தற்போது வழக்கறிஞர் ஒருவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், விஜய் நடித்து வரும் சர்கார் படத்தில் புகைக்கும் காட்சிகள் உள்ள புகைப்படங்கள் வெளியிடப் பட்டுள்ளது. இதுகுறித்து  நடிகர் விஜயிடம் விசாரணை நடத்த வேண்டும்  எனறு திருவேற்காட்டைச் சேர்ந்த தமிழ்வேந்தன் என்ற வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.