புதுடெல்லி:

பாஜக ஆட்சியில் குஜராத்தில் நூற்பாலை துறையின் வளர்ச்சியால் 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறிய தகவல் பொய் என்பது, அவரது துறையின் அறிக்கையிலேயே தெரியவந்துள்ளது.


குஜராத்தில் நடந்த உலக அளவிலான 9-வது நூற்பாலை மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய நூற்பாலைத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசினார்.

அப்போது, மோடி பிரதமரான பிறகு குஜராத்தில் நூற்பாலை மற்றும் ஆடையக தயாரிப்பு வளர்ந்துள்ளதாகவும், இதனால் 30 ஆயிரம் கோடி அளவில் முதலீடு கிடைத்துள்ளதாகவும் பேசினார்.

அதேசமயம் , அவரது அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி பார்க்கும்போது, கடந்த 2012-2017 வரையிலான காலத்தில் குஜராத்தில் நூற்பாலைத் துறை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதும், வளர்ச்சியடையவில்லை என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நூற்பாலைத் துறையின் பல கட்ட வளர்ச்சியால் கிடைத்துள்ள முதலீடு, மத்திய நூற்பாலை அமைச்சகத்தின் அறிக்கையில் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

அதாவது, ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, பொய்யான புள்ளிவிவரத்தை அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.