காஷ்மீர் குறித்து ப.சி. கருத்து… நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்!: ஸ்மிருதி இரானி

டில்லி:

காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கலாம் என்று ப.சிதம்பரம் கருத்து நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று ஸ்மிதி இராணி தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி – ப.சிதம்பரம்

ன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் ஜம்மு காஷ்மீர் மக்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்பது நியாயமானது தான் என்றும், இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

பா.ஜ.கவின் ஸ்மிருதி இரானி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “ப.சிதம்பரம் கூறிய கருத்து இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.  வல்லபாய் படேல் இந்தியா முழுவதையும் ஒரு அரசியல் அமைப்பின் கீழ் கொண்டு வர தனத முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்.  ஆனால் சிதம்பரம் இந்தியாவின் யூனியனை உடைப்பதை பற்றி பேசியுள்ளார்.

அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது.   காங்கிரசின் எண்ணத்தையே அவர் பிரதிபலித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிசெய்து பேரழிவை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது” என்று ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.