கேரளாவில் எஸ்எம்எஸ், இன்டர்நெட் இலவசம்….மத்திய அரசு

டில்லி:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் எஸ்எம்எஸ், இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘வெள்ளத்தால் பாதித்துள்ள கேரளாவில் எஸ்எம்எஸ், மொபைல் இன்டர்நெட் சேவை இலவசமாக வழங்கப்படும்.

வெள்ளம் சூழ்ந்துள்ள கொச்சி விமான நிலைய ஓடுதளத்துக்கு பதிலாக கொச்சி கடற்படை விமான ஓடுதளம் பயன்படுத்தப்படும். நாளை மறுநாள் (20ம் தேதி) முதல் கொச்சிக்கு பயணிகள் விமான சேவை தொடங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed