நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு

டில்லி:

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

17வது மக்களவைக்கான  தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நிலையில், தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம்  52 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், தமிழகம் மற்றும் கேரளா. ஆந்திர மாநிலங்களில்  மட்டுமே காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு சசிதரூர் உள்பட பலர் ஆர்வம் காட்டிய நிலையில், சோனியா காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, காங்கிரஸ் எம்.பிக்கள் மத்தியில் உரையாற்றிய சோனியாகாந்தி, காங்கிரசுக்கு வாக்களித்த 12.13 கோடி வாக்காளர்களுக்கு நம்பிக்கையாக இருப்போம் என்றும், காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த 12.13 கோடி வாக்காளர்களுக்கு  நன்றி தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி