மணிப்பூரில் ரூ.1.25 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது

இம்பால்:

மணிப்பூர் காக்சிங் மாவட்டம் பல்லேல் சோதனை சாவடியில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மியான்மர் நாட்டில் இருந்து 4.15 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் மதிப்பு ரூ. 1.25 கோடியாகும். இது குறித்து கடத்தல்காரர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்