மியான்மரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.64 லட்சம் மதிப்பு தங்கம் சிக்கியது

--

சென்னை:

மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.64 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கியது.

மியான்மர், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம், போதைப்பொருள் கடத்துவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இவற்றை தடுக்க சிறப்பு பிரிவு அதிகாரிகள் கடுமையாக முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், வருவாய் நுண்ணறிவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கைப்பை மற்றும் கிட்டாரில் மறைத்து தங்கம் கடத்திய நபரை அதிகாரிகள் பிடித்தனர்.

ரூ. 64 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், மியான்மரில் இருந்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் மேலும் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.