மாவ்:
ராகுலின் கிஷான் யாத்திரையின் ஒரு பகுதியாக இன்று மாவ் தொகுதிக்கு சென்றார். அங்கு தலித் ஒருவர் வீட்டில் மதிய உணவு சுவைத்து சாப்பிட்டார்.சாலையோர கடையில் வண்டியை நிறுத்தி இறங்கி ஸ்நாக்ஸ் சாப்பிட்டார்.
rahul2
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாரதியஜனதா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இப்போதே தேர்தல் பிராசரத்தை தொடங்கி உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாகா காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் துணைத்தலைவர் ராகுல்காந்தி கிஷான் யாத்ரா என்ற பெயரில் உ.பி. மாநிலம் முழுவதும் சுமார் 2500 கிலோ மீட்டர் தூரம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்த யாத்திரையின்போது பல இடங்களில் பொதுமக்கள், விவசாயிகளை சந்தித்து பேசி வருகிறார். உ.பி.யில் உள்ள ராமஜென்ம பூமி பகுதிக்கு சென்று அங்குள்ள அனுமன் கோயிலில் சாமி கும்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.
rahul1
இன்றைய யாத்திரையின்போது, மாவ் என்ற பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.   மதிய நேரமாகிவிட்டபடியால், அந்த பகுதி தலித் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் வீட்டில் ராகுல்காந்தி  மதிய உணவு அருந்தினார். அவருடன் குலாம் நபி ஆசாத்தும் சாப்பிட்டார்.
இதற்கிடையில் இன்று காலை யாத்திரையின்போது மாவ் தொகுதியில் கோபால்சந்ரா குப்தா என்பவரின் ரோட்டோர கடையில் வண்டியை நிறுத்தி இறங்கி கடைக்கு சென்று ஸ்நாக்ஸ் சாப்பிட்டார்.
அவருக்கு கோபால், ஜிலேபியும் , சமோசாவும்,அத்துன் பச்சை மிளகாயையும் பரிமாறினார். அந்த சிறிய கடையில் ராகுல் காந்தி அந்த சிற்றுண்டியை சுவைத்து சாப்பிட்டார். ஆனால் பச்சை மிளகாயை சாப்பிடாமல் கீழே வைத்துவிட்டார். அத்துடன் ஒரு கப் டீயும் சாப்பிட்டதாகவும், ராகுல் தனது கடைக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கடை உரிமையாளர் கோபால் தெரிவித்தார்.