சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலைய எஸ்கலெட்டரில் பாம்பு! பயணிகள் அதிர்ச்சி

சென்னை:

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையம் செல்வதற்கான எஸ்கலெட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டில் பாம்பு சிக்கியது. இதைக்கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) இன்று காலை திடீரென நின்றது. இதனால், அதில் சென்ற பயணிகள் மாற்றுப் பாதையில் சென்றனர்.

இதைத்தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்து நகரும் படிக்கை ஆய்வு செய்தனர். அப்போது, நகரும் படிக்களுக்கு இடையே பாம்பு ஒன்றி சிக்கி இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாகவே நகரும் படிக்கட்டு, நகராமல் நின்று இருந்தை கண்டுபிடித்தவர்கள், அந்த பாம்பை வெளியே எடுத்தனர். இறந்த நிலையில் காணப்பட்ட அந்த பாம்பு சுமார் 4 அடி நீளம் இருந்தது. இதைக்கண்ட ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தினம் ஆயிரக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும், மக்கள் நடமாட்டம் உள்ள சென்ட்ரல் அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பாம்பு எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது…