மெக்சிகோ,
மெக்சிகோவை சேர்ந்த ஏரோமெக்சிகோ விமானத்தில் சிறிய பாம்பு இருந்ததால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். இது பார்ப்பதற்கு ஹாலிவுட் சினிமா காட்சி போல இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
மெக்சிகோவை சேர்ந்த பயணியர் மற்றும் வர்த்தக விமானம் ஏரோ மெக்சிகோ. இந்த விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாம்பு ஒன்று இருந்தது.
விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர்,  பயணத்தின்போது, விமான இருக்கையின் மேல் பகுதியில் இருந்து பாம்பு ஒன்று நெளிவதை கண்டார். இதனால் பதற்றம் அடைந்தார்.

விமானத்தினுள் தலைக்கு மேலே பாம்பு
விமானத்தினுள் தலைக்கு மேலே பாம்பு

அந்த பாம்பு,  தலைக்கு மேலே உள்ள லக்கேஜ் வைக்கும் பகுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தது. அந்த பாம்பு  பார்ப்பதற்கு  பச்சை நிறத்தில் காணப்பட்டது.
பாம்பை  தலைக்கு மேல் பார்த்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். பலர் சீட்டை விட்டு எழுந்து வேறு பகுதிக்கு சென்றனர்.
பாம்பு விமானத்தில் இருந்தது தெரிய வந்ததும் விமானம் அவசரமாக வடக்கு மெக்சிகோவில் உள்ள டாரரான் நகர  விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அங்கு விமான நிலைய ஊழியர்கள் பாம்பை வெளியேற்றினர்.
அதன்  பிறகே பயணிகள் சகஜ நிலைமைக்கு வந்தனர்.   இந்த பாம்பை விமானத்தில் உள்ள ஒரு சிலர்  செல்போன் மூலம் படங்களும், வீடியோவும் எடுத்து சமூக வளைதங்களில் பதிவேற்றினர்.
இது பார்ப்பதற்கு ஹாலிவுட் திரில்லர்  பட காட்சி போல் இருந்ததாக பயணி ஒருவர் தெரிவித்தார்.