ரஜினி-பியர் கிரில்ஸ் ஷோவின் ஸ்னீக் பீக் வெளியீடு….!

டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் Man Vs Wild நிகழ்ச்சி, உலகம் முழுவதும் அனைவரின் பாராட்டை பெற்றுள்ள நிகழ்ச்சி ஆகும் . இதில் பியர் கிரில்ஸ் உடன் இந்தியப் பிரதமர் மோடி ஏற்கெனவே கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், அபாயகரமான உயிரினங்களை உயிரோடு உண்ணுவதில் திறமையானவர்.

தற்போது டிஸ்கவரி சேனல் தமிழிலும் தங்களது ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. இதை ரஜினி மூலம் தொடங்கியுள்ளனர் .இந்த படப்பிடிப்பு கடந்த மாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி மார்ச் 23ஆன் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை டிஸ்கவரி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த ப்ரோமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

You may have missed