மகள் ஆத்யந்தாவுடன் சினேகா…!

இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த நடிகை சினேகா கடந்த மாதம் 24ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

சினேகா ரொம்ப ஆசைப்பட்டது போன்றே இரண்டாவது குழந்தை பெண்ணாக பிறக்க அதற்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளனர்.

மகாலட்சுமி தொடர்பான ஸ்லோகத்தில் ஆத்யந்தா என்கிற வார்த்தை வரும். ஆத்யந்தா என்றால் ஆதியும், அந்தமும் அற்றவள் என்று பொருள். முதலும், முடிவும் அற்றவள் என்று அர்த்தம் என பிரசன்னா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார்.