நடிகர் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் இந்தாண்டுக்கான படிப்புச் செலவினை முழுமையாக ஏற்ற சினேகன்…!

--

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துவிட்டது மத்திய அரசு. படப்பிடிப்புகள் எதுவும் நடக்காததால் பலரும் கஷ்ப்பட்டு வருகின்றனர் .

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு, தன்னுடைய நிலைமையை விளக்கி பேட்டி ஒன்றை அளித்தார் தீப்பெட்டி கணேசன். இந்த வீடியோ பேட்டி இணையத்தில் பெரும் வைரலானது.

தற்போது தீப்பெட்டி கணேசன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவி செய்துள்ளார் பாடலாசிரியரும், நடிகருமான சினேகன்.