தெலுங்கானா தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 6 ஆந்திர போலீசார் கைது

தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆந்திர போலீசார் 6 பேர் கைது செய்யப்பட்டனர். வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடப்பெற உள்ள நிலையில் அங்கு பிரசாரம் நடந்து வருகிறது.

telungana

தெலுங்கானா மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில் ஜெகீத்யாலா மாவட்டம் தர்மபுரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேரை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதே போல மஞ்கீர்யாலா தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் 6 பேரும் ஆந்திராவை சேர்ந்த போலீசார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கைதானவர்கள் நாராயண ரெட்டி, மதுபாபு, வெங்க டேஷ்வரராவ், ராமகிருஷ்ண ரெட்டி, ராம்பாபு என்பது தெரிய வந்தது. வாக்களர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதுபற்றி முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகனும், அமைச்சருமான தாரகராமராவ் கூறும்போது, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆந்திர போலீசார் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆந்திர போலீசாரின் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளது. அங்கு செல்லாமல் தெலுங்கானா மாநில மைய பகுதியில் உள்ள தொகுதிகளில் ஆந்திர போலீசாருக்கு என்ன வேலை இருக்கிறது ? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.