ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடர் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.  24 மணி நேரத்தில் 32.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் தோடா,படேர்வா, பானிஹால் மற்றும் ரம்பன் பகுதிகள் அதிகபட்சமாக 4 செ.மீ. பனிப்பொழிவு பதிவாகி உள்ளது.

கடும் பனிப்பொழிவை தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 3வது  நாளாக மூடப்பட, வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றுள்ளன. ஜவஹர் சுரங்கப்பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தேவையின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.