இந்தியாவில் இதுவரை 11.42 கோடி கொரோனா பரிசோதனை

டில்லி

ந்தியாவில் இதுவரை 11,42,08,384 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இங்கு இதுவரை 83.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.24 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை மற்றும் தடுப்பூசி கண்டறியப்படவில்லை.

ஆகவே கொரோனா பரிசோதனை மூலம் நோயாளிகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அவ்வகையில் இந்தியாவில் நேற்று 12,09,425 சோதனைகள் நடந்துள்ளன.

இதுவரை 11,42,08,384 சோதனைகள் நடந்துள்ளன.