பிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர்… விஜயபாஸ்கர்

சென்னை:

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட  பிளாஸ்மா சிகிச்சை மூலம் தமிழகத்தில் 14 பேர் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்பட சில மருத்துவமனைகளில், சில கொரோனா நோயாளி களுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இதுவரை 14 பேர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து உள்ளதாகவும், சென்னையில் 13 பேரும், மதுரையில் ஒருவரும் குணமடைந்திருப்பதாக தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி