சென்னை,

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வரும் நிலையில், இதுவரை 40 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக தினசரி 10க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். இதன் காரணமாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில்,  கடந்த அக்.,9 வரை டெங்கு காய்ச்சலால் 40 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 11,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், மலேரியாவுக்கு 8524 பேரும், சிக்கன் குனியாவுக்கு 85 பேரும், ஜப்பானிய மூளை காய்ச்சலுக்கு 64 பேரும், எலி காய்ச்சலுக்கு 799 பேரும் ஸ்கரப் பைபஸ்க்கு 216 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெறிநாய்கடிக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.