சென்னை:

பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்றத்தில் இதுவரை எந்தவொரு கேள்வியையும் எழுப்பவில்லை என்றும், சுமார் 15 சதவிகிதம் மட்டும் வருகை புரிந்துள்ளதாகவும் பாராளுமன்றம் தெரிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,  தமிழக எம்.பி.களிலேயே மிகக்குறை அளவில் வருகை புரிந்தது பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ்தான் என்று பாராளுமன்ற வருகை பதிவேடு பகிரங்கப்படுத்தி உள்ளது.

அதே வேளையில் புதிய எம்.பி.யான அதிமுக ரவீந்திர நாத் அதிக அளவிலான விவாதங்களில் பங்குபெற்றதாகவும் தெரிவித்து உள்ளது.

17 வது மக்களவையின் இரண்டு அமர்வுகள் இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக எம்.பி.க்கள் மன்ற வருகை குறித்த தகவல்களை பாராளுமன்றம் வெளியிட்டு உள்ளது. இதில், தமிழக எம்.பி.க்களின் வருகை,  தேசிய சராசரியை விட குறைவாகவே உள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பியான, அன்புமணி ராமதாஸ், இரு அவைகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், மிகக்குறைந்த அளவிலான வருகையே உள்ளதாகவும், இது வெறும் 15% என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன்,  அன்புமணி ராமதாஸ்  இரண்டு விவாதங்களில் மட்டுமே பங்கேற்று இருப்பதாகவும், இதுவரை எந்தவொரு கேள்வியையும் முன்வைக்க வில்லை அல்லது எந்தவொரு தனியார் உறுப்பினர் மசோதாவையும் நகர்த்தவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களில், மூன்று பேர் மட்டுமே 100% வருகை புரிந்துள்ளனர். 9  எம்.பி.க்கள் 90% க்கும் அதிகமாக வருகை தந்துள்ளனர் என்றும், மிகக்குறைவாக வந்துள்ளது திமுக எம்.பி.யான ஜெகத்ரட்சகன் என்றும் தெரிவித்து உள்ளது.

அதே வேளையில், தன்னந்தனியாக மக்களவையில் முதன்முறையாக கால்பதித்துள்ள  ஆளும் அதிமுக எம்.பி.யான பி.ரவீந்திரநாத்குமார் 79 சதவிகிதம் வருகை புரிந்துள்ளதாகவும், அதே வேளையில், அனைத்து தமிழக எம்.பி.க்களை விடவும்,  42 விவாதங்களில் பங்கேற்றுள்ளார் என்றும் தெரிவித்து உள்ளது.

“அவர் கட்சியைச் சேர்ந்த ஒரே எம்.பி. என்பதால், எல்லா விவாதங்களிலும் பேச அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது” என்று முன்னாள் அதிமுக எம்.பி. ஆயினும்கூட, அவருக்கு 79% வருகை மட்டுமே உள்ளது, இது மாநில மற்றும் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது.

அதுபோல மாநிலங்களவையில், பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் குறைந்த அளவிலேயே வருகை தந்துள்ளதாகவும், இதுவரை இரண்டே இரண்டு விவாதங்களில் மட்டுமே பங்குபெற்றுள்ளார், இதுவரை  எந்தவொரு கேள்வியையும் எழுப்பியதில்லை என்றும், எந்தவொரு தனிநபர் மசோதாவையும் தாக்கல் செய்ய வில்லை என்று தெரிவித்திருப்துடன்,  சுமார் 15 சதவிகிதம் மட்டும் வருகை புரிந்துள்ளதாகவும் பாராளுமன்றம் தெரிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக எம்.பி.க்கள் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு, அங்கு என்ன விவாதிக்கப்படுகிறது, அதுகுறித்து தங்களது கட்சியின் கருத்து என்ன என்பதை பதிவு செய்ய வேண்டியது அவசியம். அமர்வு நடைபெறும் போது அவர்கள் சபையில் இருக்க வேண்டியதும் அவசியம். ஆனால், பல எம்.பி.க்கள் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதையே தவிர்த்து வருகின்றனர்.

நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், குடியுரிமை திருத்த சட்ட மசோதா உள்பட முக்கிய மசோதாக்கள் நிறை வேற்றப்பட்ட நிலையில், நாட்டின் பிரதம மந்திரியாக மோடியும் எந்தவொரு நிகழ்விலும் பங்குபெறாமல் தவிர்த்ததும், பல அமைச்சர்கள் விவாதங்களின்போது பங்குபெறாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் நிறுவனர் ஜகதீப் சொக்கர் , பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் குறைந்துவிட்டதாகவும்,  இது ஈடுபாட்டின் பற்றாக்குறையை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்து உள்ளார். தற்போதைய ஆளும் கட்சி 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றம் செயல்பட அனுமதிக்கவில்லை என்றும், இப்போது பிரதமர் கூட தவறாமல் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தவர்,   “ஒரு எம்.பி.க்கு 15% மட்டுமே வருகை இருந்தால், உறுப்பினர் சபையில் கலந்துகொள்வதை விட முக்கியமானது என்று கருதும் பிற விஷயங்களைச் செய்வதில் அவர் மும்முரமாக இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது” என்றும் கடுமையாக சாடி உள்ளார்.

பாமக எம்.பி. அன்புமணி நாடாளுமன்ற விவாதங்களில் பங்குபெறாமல் புறக்கணித்து வருவதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மக்களை சந்திக்க திராணியின்றி, டயர்நக்கி என்று கடுமையாக விமர்சித்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக ராமதாஸ், தனது மகனை பதவியில் அமர வைக்க ஆசைக்கொண்டு, அதே அதிமுக ஆதரவுடன் எம்.பி.யானதே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான்  புறவாசல் வழியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றும், அரசு உதவிகளை பெற்று சொகுசாக வாழ்ந்து வரும் அன்புமணி, மக்கள் பணியாற்றாமல் நாடாளுமன்ற விவாதங்களை  தவிர்த்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது ….

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று பரபரப்பாக பேசி தமிழக அரசியல் களத்தில் உலாக வந்த அன்புமணியின் மாற்றம், முன்னேற்றம் இதுதானோ என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அன்புமணியின் பாராளுமன்ற நடவடிக்கைகள் கடும்  சர்ச்சைகளை ஏற்படுத்தி விவாதப் பொருளாகி  உள்ளது….