பெண்கள் அழகாக இருப்பதாலே பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது: பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை

பெண்கள் அழகாக இருப்பதாலேயே  பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூட்ரெட் (Rodrigo Duterte ) கூறி உள்ளார். இது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான பிலிப்பைன்ஸ் அதிபர், ஏற்கனவே, கடவுள் ஒரு முட்டாள்… கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் பதவி விலக தயார் என்றும்,

ராணுவ வீரர்கள் மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்வதை நான் அனுமதிப்பேன்,  சிறுமிகள் கற்பழிப்பு குறித்து சர்ச்சை பேச்சு,  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆயுதம் வழங்க மறுத்த அமெரிக்க அதிபர் ஒபாமா நரகத்துக்கு போவார் என்பது  என்பது போன்று பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்துள்ள நிலையில்,

தற்போது, அழகான பெண்கள் அதிகம் இருந்தால், பலாத்கார வழக்குகளும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று கூறி மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளார்.

சமீபத்தில் தனது சொந்த ஊரில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரோட்ரிகோ டியூட்ரெட் , ‘‘போலீஸ் அறிக்கையின்படி தவாயோ நகரில் பல கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பல அழகிய பெண்கள் உள்ளனர். அதனால் தான் இங்கு அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன என்றார்.

மேலும், கற்பழிப்புக்கு முதலில் பெண்கள் சம்மதிக்க மாட்டார்கள்… வேண்டாம் என்பார்கள், மறுப்பு தெரிவிப்பார் கள். அதனால் தான் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்று பலமாக சிரித்தபடி ‘ஜோக்’ அடித்து பேசினார்.

ரோட்ரிகோ டியூட்ரெட்வின் பேச்சு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து அதிபர் சார்பில் விளக்கம் அளித்த செய்தி தொடர்பாளர்,  அதிபரின்  ‘ஜோக்’ஐ ஏன் பெரிது படுத்து கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.