Chill Donald, Chill டிரம்பை நக்கலடித்து டிவிட் பதிவிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான மாணவி கிரேட்டா தன்பெர்க்கின் டிவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க். 17 வயது சிறுமியான இவர், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே பள்ளிகள் புறக்கணிப்பு கோஷத்துடன் போராடி வந்தவர். விமானத்தில் பறப்பையும் தவிர்க்க வலியுறுத்தி ‘பறத்தல் அவமானம்’ என இவர் பிரசாரம் செய்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு ஐ.நா. சபையில், பருவநிலை மாற்றம்  சுற்றுச்சூழல் தொடர்பாக உரையாற்றியது, உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடியதுடன்,  “உங்களுக்கு எவ்வளவு தைரியம்?”, , “எனது கனவுகளை களவாடிவிட்டீர்கள்?  என்று பேசி உலக நாடுகளின் தலைவர்களை அதிர வைத்தார்.

இதையடுத்து, கிரேட்டா தன்பர்க் ஆவேசம் குறித்து டிவிட் பதிவிட்ட   அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப்,  இது அபத்தமானது. கிரேட்டா தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். பிறகு ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு தனது நண்பருடன் செல்லவேண்டும். Chill Greta, Chill! என கிரேட்டாவை கேலிசெய்து  கடந்த ஆண்டு (12/12/2019 ) அன்று டிவிட் பதிவிட்டிருந்தார்.

தற்போது அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தோல்வி பயத்தில் உள்ள டிரம்ப் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை  நிறுத்த வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாகவும் புலம்பி டிவிட் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலரான  கிரேட்டா தன்பெர்க், டிரம்பின் டிவிட்டுக்கு சுமார்  11 மாதங்கள் கழித்து தற்போது பதிலடி கொடுத்துள்ளார். தனது பேச்சு குறித்து  டிரம்ப் பதிவிட்ட, கேலி வார்த்தைகளையே அவருக்கு நினைவுபடுத்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

கிரேட்டா தன்பெர்க் பதிவிட்டுள்ள  டிவிட்டில்,  இது அபத்தமானது. டிரம்ப் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுக்கவேண்டும். பிறகு ஒரு நல்ல பழைய திரைப்படத்திற்கு தனது நண்பருடன் செல்லவேண்டும் Chill Donald, Chill என்று  பதிவிட்டுள்ளார்.

{So ridiculous. Greta must work on her Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Greta, Chill!‘}

கிரேட்டாவை கேலி செய்த டிரம்பின் டிவிட்டைவிட, கிரேட்டா தன்பெர்க்கின் டிவிட் சமுக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றதுடன், கிரேட்டாவிற்கு ஆதரவாக பலர் டிவிட் செய்துவருகின்றனர்.