பத்தணந்திட்டா:

ம்பை ஆற்றில் சோப்பு போட்டு குளித்தால் ஆறு வருடங்கள் வரை சிறைத் தண்டனை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிப்பது வழக்கம். இங்கு குளித்தால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சபரிமலை மண்டல பூஜையை ஒட்டி பம்பை ஆற்றில் இப்படி லட்சக்கணக்கான பக்தர்கள் குளிப்பது வழக்கம். இப்படி குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பதோடு, தங்களது உள்ளாடைகள், மாலைகளை ஆற்றில் வீசி எறிவதும் வழக்கமாக இருக்கிறது.

மேலும் எச்சில் இலைகளையும் பம்பை ஆற்றில் வீசுகிறார்கள். இதனால் பம்பை ஆறு அசுத்தமாகிறது.

இதை தடுக்கும் நோக்கில், இந்த ஆண்டு பத்தணந்திட்டா மாவட்ட நிர்வாகம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் ஆகிவயற்றை பயன்படுத்தி பம்பையில் குளிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளது.

தடையை மீறுவோருக்கு ஆறு வருடங்கள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.