பாலில் சோப்பு ஆயில் கலப்படம்! மக்கள் அதிர்ச்சி

மதுரை,

சோதனை செய்யப்பட்ட தனியார் பாலில் சோப் ஆயில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் பாலில் கலப்படம் நடப்பபதாக, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து  தனியார் பால்வ நிறுவனங்கள் சோதனைக்கு தயார் என்றும் கூறியது. அதைத் தொடர்ந்து தனியார் பால்கள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாலில் கலப்படம் என்ற தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தன.

இந்நிலையில் பாலில் செய்யப்படும்  கலப்படம் குறித்து ஆராய, மதுரை ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் இன்று பால் பரிசோதனை முகாம் மதுரையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் முழுவதும் ஐந்து கட்டங்களாக, பால் தர பரிசோதனை பரிசோதனை செய்து வருகின்றனர்.

இன்றைய சோதனையின்போது மதுரையை சேர்ந்த  100 வார்டுகளில் இருந்து 108 பால் மாதிரிகள்  எடுத்துவரப்பட்டு கோ.புதூர் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஒரே ஒரு பாலில் மட்டும் கலப்படம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தனியார் பாலில் சோப்பு ஆயில் கலந்திருப்பது இயந்திரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, அந்த பாலை முழு ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்  உத்தரவிட்டார்.

இது மதுரை மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.